தயவு செய்து
திருப்பி கொடுத்து விடாதே..
என்னை நீ...
அண்மையில் தான்
மகிழ்வோடு தொலைந்தேன்..
உன்னில் நான்.
கொஞ்ச நாள்
நெஞ்சில் நிறுத்திப் பார்..
நேசம் புரியும்.
......செந்தமிழினியன்
Thursday, February 18, 2010
Sunday, June 15, 2008
ஆன்மீக நரகம்

ஆன்மீக பூமியிலே
நாளுக்கு ஓர் உயிர்க்கொலை
அமைதியான நகரத்தில்
அடைப்பு நாட்கள் ஏராளம்!
கொலைகள் இங்கே
மலிவாக நடக்கிறது!
கால் அரை பாட்டில்களுக்கும்
காசுகளின் தேவைக்கும்!
விலங்குகள் வேட்டையாடுவது
உணவுக்கு மட்டுமே
மாந்தனின் வேட்டைக்கு
1008 காரணங்கள்...
சிந்திக்க நேரமின்றி
சிதறடிக்கப்படும் மூளைகள்!
நற்பயிராகாமல் இங்கே
நச்சுக் களைகளாகின்றன!
கை கட்டும் அதிகாரிகள்
காவலுக்கு அரசியல்வாதிகள்
காடையர்களின் துணிகரம்
கனமழையாய் இன்னும்.....
Monday, June 9, 2008
பசி
உலகில் பிறந்த
ஒவ்வொரு உயிருக்கும்
முதல் நோய் பசி
வளர்கின்ற பொழுதில்
கட்டாயத் தேவை
அன்புப் பசி
வளர்ந்த பின்
உலகை அறிய
அறிவுப் பசி
ஆளான பருவத்தில்
அரும்பி மலர்ந்திடும்
உடல் பசி
வாழ்வை வளமோடு
வாழ்ந்திட தேடிடும்
பொருள் பசி
உறவுகளின் துணையோடு
வாழ்கின்ற காலத்தில் வரும்
கடமைப் பசி
ஊருக்கு உழைக்கின்ற
அரிதான சிலரிடம்
காண்பது ஈகைப் பசி
அகவை முதிர்ந்து
ஏங்கும் மனதினில்
வந்திடும் தனிமைப் பசி
எல்லோர்க்கும் ஒரு நாள்
இறுதியாக வரும்
மரணப் பசி.
ஒவ்வொரு உயிருக்கும்
முதல் நோய் பசி
வளர்கின்ற பொழுதில்
கட்டாயத் தேவை
அன்புப் பசி
வளர்ந்த பின்
உலகை அறிய
அறிவுப் பசி
ஆளான பருவத்தில்
அரும்பி மலர்ந்திடும்
உடல் பசி
வாழ்வை வளமோடு
வாழ்ந்திட தேடிடும்
பொருள் பசி
உறவுகளின் துணையோடு
வாழ்கின்ற காலத்தில் வரும்
கடமைப் பசி
ஊருக்கு உழைக்கின்ற
அரிதான சிலரிடம்
காண்பது ஈகைப் பசி
அகவை முதிர்ந்து
ஏங்கும் மனதினில்
வந்திடும் தனிமைப் பசி
எல்லோர்க்கும் ஒரு நாள்
இறுதியாக வரும்
மரணப் பசி.
Subscribe to:
Posts (Atom)